×
 

திட்டக்குடி துயரச் சம்பவம்... உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!

திட்டக்குடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த சோக சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் (SETC) பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.

பேருந்து சாலையின் நடுத்தடுப்பைத் தாண்டி எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த மோதலின் விசையால் கார்கள் பலத்த சேதமடைந்தன. இரண்டு கார்களிலும் பயணம் செய்தவர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த ஒன்பது பேரில் ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவர். அவர்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. தீயணைப்பு படை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அமெரிக்கா: கடலில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்..!! பரிதாபமாக பறிபோன 5 உயிர்..!!

இந்த துயர சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: சொன்னா கேளுங்கய்யா... விஜய் வாகனத்தை துரத்திச் சென்றபோது விபத்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share