×
 
☰

"விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்"..! எல்லாத்துக்கும் வெற்றி-ன்னு ஸ்டிக்கர்..! ஸ்டாலின் தாக்கு.!!

தமிழக வெற்றிக்கழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு தனது கருத்தை வெளியிட்டார். மளிகைக் கடை ஒன்றில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பேசும்போது, எம்எல்ஏ ஷாப்பிங்-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு மக்கள் மளிகைக் கடையில் கூட ஷாப்பிங் செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா என்று கேட்டார். நான்கு மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா என்று கேள்வி எழுப்பினார்.இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது என்று நினைவுகூர்ந்த ஸ்டாலின், இன்றைய நிலை என்ன என்று கேட்டார்.

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்த நிலையில் கூட கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத வேஸ்ட் ஆட்சி என முடிவெடுத்து தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான கைடன்ஸ் டிஎன்-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விளையாட்டா.? இருமொழிக் கொள்கை.. உயிர்க் கொள்கை..! விளாசிய ஸ்டாலின்..!!

பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் கூறினார். இவற்றில் கவனம் செலுத்தாமல் விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் வெற்றி என ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

 

 

இதையும் படிங்க: "சிவன் சொத்து குல நாசம்"..! எத்தனை கோவில் ஏறினாலும் பாவம் தீராது... தவெக விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share