வேட்புமனு தாக்கலில் தகராறு...! திமுக MP கல்யாண சுந்தரம் மீது பாய்ந்த வழக்கு..!!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் பழமையான பரஸ்பர சகாய நிதி லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிறுவனம் சுமார் நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இதில் லட்சக்கணக்கான பங்குதாரர்கள் உள்ளனர். பல நூறு கோடி ரூபாய் அளவில் வைப்புத்தொகை மற்றும் தங்க நகை அடமானக் கடன்கள் உள்ளன.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுவாக இந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நான்கு இயக்குநர் பதவிகளின் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறை இணையதளம் வழியாக இ-வோட்டிங் முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
செப்டம்பர் 27 முதல் 30 வரை நடைபெற்ற இந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், வேலப்பன், அன்பழகன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்று நிர்வாகப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் போட்டியிட முயன்றனர்.
இதையும் படிங்க: கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்..! பாமகவுடன் கள்ள உறவு..! தமிழகத்தை சீரழிக்கும் தூய சக்தி... அப்பாவு விமர்சனம்.!!
அவர்களில் ஸ்ரீதேவி என்பவரும் அடக்கம். வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றபோது திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கைகலப்பு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து ஸ்ரீதேவி கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!