×
 
☰

கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்..! பாமகவுடன் கள்ள உறவு..! தமிழகத்தை சீரழிக்கும் தூய சக்தி... அப்பாவு விமர்சனம்.!!

பாமகவுடன் கள்ள உறவு வைத்திருப்பதாக அப்பாவு முதல்வர் விஜயை விமர்சித்து உள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழக முதல்வரை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் ஆதரவை வாங்கிக் கொண்டு பாஜகவுடன் கள்ள உறவு வைத்துக்கொள்வதாகவும், விடுதலைச் சிறுத்தைகளின் துணையைப் பெற்றுக் கொண்டு பாமகவுடன் கள்ள உறவு கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஐயூஎம்எல்லை பயன்படுத்திக் கொண்டு பக்ரீதுக்கு மாடு வெட்ட தடை விதிப்பதும், இடதுசாரிகளின் உதவியை வாங்கிக் கொண்டு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் கள்ளக் கூட்டணியாகவே அமைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம் என்று தோழமைக் கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அமித்ஷாவை சந்தித்து தொகுதி மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் பாஜகவின் கிளை ஆட்சியை நடத்துவதாக உறுதிப்படுத்திவிட்டீர்கள் என்று அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி மருத்துவம், குறைந்த கட்டணத்தில் தடையற்ற மின்சாரம், காலை உணவு திட்டம் என்று எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை வழங்கிய திமுகவை தீய சக்தியாக பார்க்கிறீர்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர் மின்வெட்டு, மின் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு தனியாருக்கு தாரை வார்ப்பு, பேருந்து ஓட்டுநர் நடத்துனர் பணிக்கு ஆள் சேர்க்க உத்தர பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குதல், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்கள், தமிழக கனிம வளங்களை ஆந்திர ரெட்டி கேங்கிடம் ஒப்படைப்பு, காவிரி டெல்டாவை வறண்ட பூமியாக மாற்றியது போன்ற மக்கள் விரோத திட்டங்களை அடுக்கடுக்காய் செய்து தமிழகத்தை சீரழிக்கும் நீங்கள்தான் தூய சக்தியா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: தாராபுரத்தை முற்றுகையிடும் அரசியல் தலைவர்கள்!! தேர்தல் போர் உச்சக்கட்டம்! கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மக்களால் விரட்டியடிக்கப்படுவதிலிருந்து நீங்கள்தான் தீயசக்தி என்பது புரியவில்லையா என்று முதல்வர் விஜயை நோக்கி அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் விழித்துக் கொண்டுவிட்டனர். உங்கள் ஆட்சிக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது. மக்கள் உண்மையான மாற்றத்திற்குத் தயாராகிவிட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: #BREAKING செங்கோட்டையன் தலையில் இறங்கியது பேரிடி... அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக... உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share