வீரியமெடுக்கும் SIR விவகாரம்... முதல்வர் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடக்கம்...!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
தற்போது முக்கிய பிரச்சினையாக வாக்காளர் சிறப்பு திருத்தம் உருவெடுத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் சிறப்பு திருத்தம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி பதிலடி... திட்டங்களை லிஸ்ட் போட்டு தெறிக்க விட்ட ம.சு...!
தமிழகத்திலும் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை கொண்டுவர தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்று உள்ளனர். இந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதிகள், ஜிஎஸ்டி விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கதறும் சீனியர்கள்... பதறும் கூட்டணி கட்சிகள்... உதயநிதியின் அரசியல் எதிர்காலத்திற்காக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!