×
 

இங்க வாலாட்ட முடியாது.. வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திமுக எதிர்க்கும்! என்.ஆர் இளங்கோ திட்டவட்டம்..!

இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்த நீக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் வழக்கமான சுருக்கமுறை திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. 

இந்த அறிவிப்பு, வாக்காளர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ், பிறந்த இடம், 1981-க்கு பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோரின் பிறப்பிடம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது. 

மேலும், ஆதார் மற்றும் பான் அட்டைகள் இந்தச் சான்றாக ஏற்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, பீகாரில் 2025 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இபிஎஸ்க்கு எம்ஜிஆர், ஜெயலலிதா-னு நெனைப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய மைத்ரேயன் விமர்சனம்..!

 இது பல அரசியல் கட்சிகளிடையே சந்தேகத்தையும் எதிர்ப்பையும் தூண்டியது.திமுக, இந்த நடவடிக்கையை பாஜகவின் ஆளும் ஒன்றிய அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகப் பார்க்கிறது.

சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் வாக்காளர் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக வலியுறுத்தல் ஒன்றை வைத்துள்ளது. இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்.ஆர். இளங்கோ வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் போது ஆதாரை ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடத்தப்பட்டால் திமுக அதனை எதிர்க்கும் என்று தெரிவித்தார். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை சட்டரீதியாகவும் திமுக எதிர்கொள்ளும் என தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் என்ன? திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share