திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!
திமுகவின் வாக்கு வங்கி பலமாக உள்ளது என்று பரந்தாமன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் தமிழக வெற்றிக் கழகம் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், திமுக இரண்டாம் இடத்தைப் பிடித்து தனது வாக்கு வங்கியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுகள் குறித்து இரு தரப்பிலும் கருத்துகள் வெளிவந்துள்ளன.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இடைத்தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசும்போது, திமுகவின் வாக்கு வங்கி வலிமையாக இருப்பதை இந்தத் தேர்தல் உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். அதேநேரம், கடந்தகாலத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் தான் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி தவெகவுக்கு மாறியிருப்பதாகவும், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். தவெக பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றதாகவும் பெருமைபடக் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டவருமான பரந்தாமன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். கூட்டணி இல்லாமல் தனியாகப் போட்டியிட்டும் திமுக இரண்டாம் இடத்தைத் தக்கவைத்தது முக்கியமானது என்றார்.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!
மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல்வர் அறையில் அமைச்சர்கள் ஒன்றுகூடி கை சைகை செய்து வெற்றியைக் கொண்டாடியதை அவர் கடுமையாக விமர்சித்தார். இது தவறான முன்னுதாரணம் என்றும், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது பொருத்தமல்ல என்றும் குறிப்பிட்டார். அதேநேரம், தவெக ஓட்டுக்குப் பணம் வழங்கியதாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பகிரங்கமாகப் பேசியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை வைகோ கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பாஜகவின் நீட்சி தவெக..! ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... ஸ்டாலின் திட்டவட்டம்..!!