கள்ள ஓட்டு சர்ச்சை..! திமுகவினர் தர்ணா..! களேபரமான ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடி..!!
கள்ள போட்டு சர்ச்சை ஏற்பட்டதால் திமுகவினரை வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியே அனுப்பியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூர் தொகுதியில் ஏற்கனவே பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் ஆதரவாளர் வீட்டில் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் பணம் சிக்கியிருந்தது. கடும் சர்ச்சையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
ஐடி கார்டு இல்லாமல் வாக்களிக்க அனுமதிக்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அவர் முறையிட்டார்.
ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுப்புவதாகவும், எப்படி ஓட்டு போடுகிறார்கள் என்ற கேள்வி எழுப்பினார். தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றும் நியாயமாக நடக்கவில்லை என்றால் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழிசையின் இந்த பேச்சுக்கு கடும் திமுகவினர்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!
இதனால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தூய பிரான்சிஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரியிடம் தமிழிசை சௌந்தரராஜன் புகார் தெரிவித்த நிலையில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் வாக்குச்சாவடி மையத்தின் வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை காக்கும் கேடயம்..! தவறாமல் ஓட்டுப் போடுங்க..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!