×
 

வஞ்சிப்பதே வேலை... மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து மத்திய அரசு... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்...!

மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரை, வேகமாக வளரும் தொழில் மற்றும் சுற்றுலா மையங்களாக உருமாற்றம் காண்கின்றன. கோவையில் தினசரி லட்சக்கணக்கான பணியாளர்கள் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை போன்ற பரபரப்பான பாதைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். அதேபோல், மதுரையில் திருமங்கலம் முதல் ஓதக்கடை வரையிலான பகுதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப்பகுதி மற்றும் பெரியார் பஸ் டெர்மினஸ் போன்றவை போக்குவரத்து அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, 2010-ஆம் ஆண்டு மத்திய அரசு 16 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை அறிவித்தபோது, கோவை மற்றும் மதுரை இதில் சேர்க்கப்பட்டன. 2011-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தத் திட்டங்கள் முறையாக அறிவிக்கப்பட்டன. 

தற்போது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது. கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாக மத்திய அரசு பதிலளித்தது. மத்திய அரசின் நிராகரிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள

இதையும் படிங்க: என்னது தரம் இல்லையா? கேள்வி கேளுங்க., அப்ப புரியும்... ஆளுநருக்கு அன்பில் மகேஷ் சவால்...!

மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி வியாழக்கிழமை கோவையிலும், நவம்பர் 21ஆம் தேதி மதுரையிலும் காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேடுகெட்ட ஆட்சி... காட்டாட்சி..! கடிவாளம் போடுவோம் முதல்வரே... நயினார் உறுதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share