×
 

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக, ஒத்துஊதும் அதிமுக..! திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!

100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டிச.24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அழிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் வரும் 24 ஆம் தேதி (24.12.2025) புதன்கிழமை காலை 10 மணியளவில், தலைநகர் சென்னையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என திரளாானோர் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குட் நியூஸ்... தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை... சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்...!

 தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: செவிலியர்களை விடுவிக்கணும்... வாக்குறுதியை நிறைவேற்ற EPS வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share