×
 
☰

போதை மாஃபியாவை வச்சுக்கிட்டு ஊருக்கு உபதேசமா.? CM விஜய்யை பந்தாடிய ஸ்டாலின்..!!

போதைப்பொருள் விவகாரத்தில் தவெக நிர்வாகி சிக்கிய விஷயத்தை சுட்டி காட்டி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் டிஆர்ஐ அதிகாரிகளால் நாகப்பட்டினம் மாவட்ட தவெக நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார்.

போதை ஒழிப்பு குறித்து முதலமைச்சர் மேடைதோறும் வலியுறுத்தி வருவதை போதை ஒளிப்பு எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததே அவரது குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார் என அவர் கிண்டலாகக் கூறினார்.சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் தவெக தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த நெட்வொர்க்கையும் சுற்றி வளைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்குப் பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் தவெகவில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள் என அவர் அரசுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க: எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் பேட் பார்ட்டி என்று பெயரெடுத்திருந்த தவெக, அடுத்தகட்டமாக பிரேக்கிங் பேட் பார்ட்டியாக ப்ரமோஷன் பெற்றுள்ளது என ஸ்டாலின் கிண்டல் செய்தார். பயமா இருக்கா? போகப் போக இன்னும் பயங்கரமா இருக்கும் என முதலமைச்சர் இதற்கும் பஞ்ச் டயலாக் அடிக்காமல் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்தார். தவெக கட்சியின் போதை தொடர்பான செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: பாஜக வழியில் தவெக..! மறுக்க முடியுமா CM சார்.? வம்பிழுத்த அப்பாவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share