உயிர் காக்கும் மருந்துகள் எங்கே.? மோதிரம் மாட்டி விளம்பரத்துக்கு துடிக்கும் அரசு..! தமிழச்சி தங்கபாண்டியன் விளாசல்..!
பிஞ்சு குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் இருப்பதாக சுட்டிக்காட்டி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கவலை தெரிவித்துள்ளார்.
தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாத நிலையில் சுகாதாரத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடும் அக்கறை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதே அக்கறையை குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா எனக் கேட்டுள்ளார். குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நில மோசடி.! ரெண்டு வாரம்தான் டைம்..! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க உத்தரவு.!
இந்த நிலைமை தொடர்ந்தால் பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், குழந்தைகளின் உயிரைக் காப்பது முதன்மையான கடமை என்பதை அரசு உணர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!