×
 

CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்தார். ஆளுங்கட்சியினரை போலவே எதிர்க்கட்சிணரும் அரசியல் கருத்துக்களை ஜனநாயக முறையில் தெரிவிக்க உரிமை உள்ளது என்று கூறினார். பெண்களை அவமதிக்கும் வகையில் ஒருவர் பேசுவதில் ஒரு பெண் தலைவராக தனக்கு உடன்பாடில்லை என்று கூறினார்.

இருப்பினும் உதயநிதி மீது வழக்கு போடுங்கள் என்றும் அதனை அவர் எதிர்கொள்ளட்டும் என்றும் விளக்கம் தரட்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் உடனே கைது நடவடிக்கை ஏன் என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் ஜனநாயகம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது எனவும் தெரிவித்துள்ளார். வலைதளங்களில் ஏராளமானோர் மோசமான கருத்துக்களை தான் கூறுகின்றனர் எனவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்களா என்றும் கேட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளக்கூடாது என நினைத்து இப்படி செய்கிறார்களா என்ற சந்தேகத்தை பிரேமலதா முன் வைத்திருக்கிறார். எந்த ஒரு பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு உதயநிதி கூற வில்லை என்றும் அப்படி இருக்கும்போது கைது நடவடிக்கை ஏன் எனவும் கேட்டுள்ளார். மேகதாது பிரச்சனை, வறட்சியில் விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் இது தேவையா எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் உதயநிதி கைது செய்யப்பட்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்தார். உதயநிதியை கைது செய்தது தமிழக வெற்றிக்கழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பாதுகாப்பில்லை எனவும் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் உடனடியாக ஏன் கைது செய்யப்படவில்லை என்றும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். 

இதையும் படிங்க: பட்டை நாமமா? மொட்டையா? - பட்ஜெட்டில் மக்களுக்கு என்ன தரப்போகிறார் விஜய்... ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share