×
 

தொகுதி பங்கீடு இழுப்பறி... அடம் பிடிக்கும் CPM... சமாதான பேச்சுவார்த்தைக்கு களமிறங்கிய வைகோ..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடு இழுப்பறியாக இருக்கும் நிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்த வைகோ களமிறங்கியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான பேச்சுகள் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பின்னரும் இன்னும் இறுதி முடிவுக்கு வராமல் இழுபறி நீடித்து வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய இடதுசாரி கூட்டாளியாக உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றிருந்தது.

ஆனால் இம்முறை திமுக சிபிஎம்முக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிபிஎம் கட்சி கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கோரி உறுதியாக நிலைப்பாடு எடுத்துள்ளது. மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையிலான குழு, "கூடுதல் தொகுதிகள் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை என்று திமுக கூறுவது ஏற்கத்தக்கதல்ல" என விமர்சித்து வருகிறது. மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

இதையும் படிங்க: "பனைத் தொழிலாளர்களை தாக்கி பொய் வழக்கு"..! சீமான் கடும் கண்டனம்..!

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவு வருகிறது. இதன் காரணமாக இன்று சிபிஎம் கட்சி சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வைகோ சென்றுள்ளார் திமுக சார்பில் சமாதான பேச்சுவார்த்தைக்காக வைகோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது வைகோ பேச்சு வார்த்தையின் முடிவில் எத்தனை தொகுதி என்பது தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீட்டில் இழுபறி..! மார்க்சிஸ்ட் கட்சி அவசர ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share