யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வெப்ப வாதத்திற்கான சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது என திருவாரூரில் மருத்துவர் நடராஜன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இருந்து முக்கிய தகவல்கள் இதோ...
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோடை வெயில் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி மருத்துவர் நடராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தற்போது கோடைக்காலம். ஒவ்வொரு சுழற்சி முறையில் 5 லிருந்து 6 வருடத்திற்கு ஒருமுறை எல்நினோ, பினோமினோ வரும். அதை இந்த வருடம் எதிர்பார்கிறார்கள். அதில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என சுற்றறிக்கை வந்துள்ளது. எனவே அதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வெப்ப அலை வீசகூடிய தருணத்தில், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் வெயிலில் வெளியே போவதை தவிர்த்து கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். நமக்கு நீர் சத்து அவசியம். அனைவரும் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்வதோடு நீர்மோர் உப்பு கலந்து எடுத்தௌக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு கடிதம்! குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தியதாகப் புகார்!
இளநீர், தர்பூசணி ஜூஸ் எடுத்திக்கொண்டால் உடல்நிலையை பாதுகாத்து கொள்ள முடியும். வட மாநிலங்களில் உள்ளது போல வெப்ப அலை பாதிப்பு இங்கு இல்லை. அங்கே 40, 44 டிகிரி டெம்பரேச்சர் உள்ளது. இங்கு 38 என்கிற அளவிலேயே டெம்பரேச்சர் உள்ளது. இது அதிகரித்தால் வெப்ப சோர்வு, வெப்ப வாதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வெயில் நேரத்தில. வேலை பார்க்கும் விவசாயிகள் உட்பட தொழிலளர்கள் பலரும் தண்ணீர் சத்து எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படுகையில் அதிக சோர்வு இருக்கும். வாந்தி, மயக்கம், தலைவலி வரலாம். இவை தெரிந்தால் உடனடியாக ஓய்வெடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் சத்து எடுத்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது. அதையும் மீறி வெப்பம் அதிகரிக்கும்போது மூளை பாதிக்கபடுகையில், முதலுதவி உடனடியாக அளிக்க வேண்டும். மயக்கம் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறலாம். அல்லது திருவாரூர் மருத்துவ கல்லூரி தனி பிரிவில் சிகிச்சை பெறலாம்.
இங்கு அனுமதிக்கப்பட்ட 2, 3 மணி நேரங்களில் பாதிப்பிலிருந்து நோயாளி மீண்டு விட முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றை தவிர்க்க அனைவரும் தண்ணீர் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெயிலில் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!