×
 

“விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!

மாசுபட்டவர்கள் எல்லோரும் விஜய் அருகில் வந்ததும் தூய்மை அடைந்துவிடுகிறார்களா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்தார். குறிப்பாக, ஊழல் மற்றும் கொள்கை முரண்பாடுகளைக் கடந்து விஜய் பக்கம் சேருபவர்கள் புனிதர்களாக மாறிவிடுவார்களா? என்ற ரீதியில் அவர் எழுப்பிய கேள்விகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வீரபாண்டியன், "விஜய் எதை ‘தீய சக்தி’ என்று சொல்கிறார்? நேற்று வரை அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்து அதிகாரத்தை அனுபவித்த செங்கோட்டையன், இன்று விஜய் அருகில் சென்றதும் மகா தூய்மையானவராக மாறிவிட்டாரா? மாசுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விஜய் அருகில் சென்ற மாத்திரத்திலேயே அவர்கள் தூய்மை அடைந்துவிடுவார்கள் என்றால், அப்படி ஒரு சக்தி அவரிடம் இருப்பது இந்தியாவிற்கே நல்லதுதான். ஆனால், இது அரசியலே கிடையாது" என்று விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் என்பது ஒரு தனி நபரைச் சுற்றியோ அல்லது மேஜிக் வட்டத்தைச் சுற்றியோ இருக்கக் கூடாது. அது கொள்கைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். மக்களைப் பிரிக்காத கொள்கையே உண்மையான கொள்கை. இந்திய ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும் சிதைக்கும் பா.ஜ.க-வே நாட்டின் முதல் எதிரி என்பது எங்களது கொள்கை நிலைப்பாடு. அந்த அடிப்படையில் தான் தி.மு.க-வை நாங்கள் கொள்கைக் கூட்டணியாகப் பார்க்கிறோம். ஆனால், செங்கோட்டையன் போன்றவர்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஆடுவார்கள். மற்றவர்களை மதிப்பிடுவதை விட, அவர்களின் கொள்கையில் உள்ள தீமைகளைத் தான் கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது என்று கொள்கை விளக்கம் கொடுத்தார்.

இதையும் படிங்க: போலீஸுக்கு சுதந்திரம் இல்லை… 2026-ல் இந்த நிலை மாறும் – அருண் ராஜ் உறுதி

மேலும், கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் சாதாரண மனிதர்களின் கேள்விகளுக்குக் கூட அரசியல் ரீதியாகப் பதிலளித்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயகத்தில் சிறு கட்சிகளுக்கும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு என்றார். "யார் தீய சக்தி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்; வெறும் வார்த்தைகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது" என்று வீரபாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிளான் ரெடி… விஜய் சொன்னா போதும்… தேர்தல் பிரச்சாரத்தை நான் பார்த்துக்குறேன்! – செங்கோட்டையன் பேட்டி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share