×
 

2ஆம் வகுப்பு மாணவி முகத்தை கடித்து குதறிய தெரு நாய்! நெல்லையில் அதிர்ச்சி..!

நெல்லையில் இரண்டாம் வகுப்பு மாணவியின் முகத்தை தெரு நாய் கடித்துத் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாக பொது விவாதத்திற்கு உட்பட்டவை. குறிப்பாக, தெரு நாய்களின் தாக்குதலால் குழந்தைகள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ரேபிஸ் நோய் பரவுதல், சாலை விபத்துகள் போன்றவை தொடர்ந்து புகார்களாக எழுந்து வந்துள்ளன. இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11அன்று டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் பிறப்பிக்கப்பட்டது. 

அனைத்து தெரு நாய்களையும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உள்ளவற்றை, 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் முடிவை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இரவு நேரங்களில் தெரு நாய்களால் பல தொல்லைகள் ஏற்படுவதாகவும், சாதாரணமாக நடந்து செல்பவர்களையும் வாகனத்தில் செல்பவர்களையும் கூட தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் நிகழ்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தெரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: நெல்லையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.. புத்தகப்பையில் கத்தி! காரணத்தை கேட்டு ஷாக் ஆன ஆசிரியர்கள்..!

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் தெருவில் விளையாடிய போது தெரு நாய் கடித்ததில் இரண்டாம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்துள்ளார். தெரு நாய் கடித்துக் குதறியதில் முகத்தில் படுகாயம் அடைந்த மாணவி பிரித்திகா என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க: நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share