×
 

தமிழகத்தையே உலுக்கிய தாய்,மகள் இரட்டை கொலை... 3 பேருக்கு இரட்டை ஆயுள் ... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

குன்றத்தூரில் நகைக்காக தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

குன்றத்தூரில் நகைக்காக தாயும் மகளையும் கொலை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு ஆறு ஆயுள் தண்டனை 80 ஆயிரம் ரூபாய் அபராதம். முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி தீப்தி அறிவு நிதி தீர்ப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பேசில் கார்டன் பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவர் ஓமன் நாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி ஆசிரியரான தேன்மொழி(30) தேன்மொழியின் தாய் வசந்தா மற்றும் இரண்டு குழந்தைகளான 6 வயது சுரவிஸ்ரீ மற்றும் ஆறு மாத குழந்தைகளான குணஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தனர்.

இவர்கள் வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணிபுரியும் சத்யா(28) என்பவர் இவர் வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை கண்டு தனது கூட்டாளிகளான ஜெயக்குமார் (55) தவ்லத்பேகம்(50) ஆகியோர் இணைந்து கூட்டு சதி திட்டம் தீட்டி கடந்த 2016 ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேன்மொழி ஆசிரியர் வேலைக்கு சென்றிருந்தபோது அவரது அம்மா வசந்தா மற்றும் இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் சத்யா கூட்டாளிகளான ஜெயக்குமார், தவுலத் பேகம் அவர்களது கூட்டாளியை அழைத்து வசந்தாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

இதையும் படிங்க: இறந்தவர்கள் பெயர் நீக்க திமுகவுக்கு என்ன பயம்? CV சண்முகம் சரமாரி கேள்வி..!

இந்நிலையில் தேன்மொழியை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்த து அவரையும் 16 இடங்களில் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். 

மேலும் இதைப் பார்த்த ஆறு வயது குழந்தையையும் மற்றும் ஆறு மாத குழந்தையும் கொலை செய்ய முயற்சித்த போது இருவரும் மயக்கம் அடைந்ததை கண்டு இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த 16 சவரன் நகை, விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். 

ஒரு மணி நேரம் கண்விழித்த ஆறு வயது குழந்தை சுரவி ஸ்ரீ மயக்கம் தெளிந்து தனது தங்கையை அ அழைத்துக் கொண்டு கொண்டு எதிர் வீட்டில் உள்ள கன்னியப்பன் என்பவர் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளார். 

அவர் உடனடியாக குன்றத்தூர் போலீசில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதை எடுத்து குன்றத்தூர் போலீசார் உயிரிழந்த இருவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதமர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் அரசு தரப்பு அரசு வக்கீல் சசிரேகா 39 சாட்சிகளை விசாரணை மேற்கொண்டு வழக்கை இறுதி செய்தார். 

இவ்வழக்கின் மாவட்ட நீதிபதி தீப்திஅறிவுநிதி நகைக்காக கொடூரமாக கொலை செய்த சத்யா ஜெயக்குமார், தவுலத் பேகம் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்து, குற்றவாளிகள் மூன்று பேருக்கும் ஏழு பிரிவுகளின் கீழ் தலா ஆறு ஆயுள் தண்டனையும், 80,000 அபராதம், தண்டனை முழுவதையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு நிதி உதவி வழங்கவும் குற்றவாளிகள் செலுத்தும் அபராத தொகையையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி தீர்ப்பு அளித்தார்.

இரட்டைக் கொலை வழக்கில் தீர்ப்பளித்த சம்பவம் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்..." - சாட்டையைச் சுழற்ற தயாராகும் விஜய்... தவெ மா.செ.க்களுக்கு ஆப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share