×
 
☰

"கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

சென்னையில் தமிழ்நாடு அரசு ஒரு பெரிய விளையாட்டுக் கனவை நனவாக்கும் வகையில் முக்கிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, 2036 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்லும் நோக்கில் மிஷன் ஒலிம்பிக் 2036 என்ற சிறப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் இளைஞர்களிடம் உள்ள விளையாட்டுத் திறனை அடையாளம் கண்டு, அவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதே இதன் முதன்மை நோக்கம். பள்ளிகளிலும் கிராமங்களிலும் உள்ள எட்டு முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட மாணவ மாணவியரைத் தேர்ந்தெடுத்து, நீண்டகாலப் பயிற்சி அளிக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

திறமை உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு அறிவியல்பூர்வமான பயிற்சி, ஊட்டச்சத்து, மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஒலிம்பிக் அரங்கில் போட்டியிடும் அளவுக்குத் தயார் செய்யும் பாதை வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக சென்னையில் உலகத் தரமான ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படுத்தப்படும். சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன உபகரணங்கள், உயர் செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ மையங்கள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் ஆகியவை இதில் இடம்பெறும்.

ஒரே இடத்தில் பயிற்சி, ஆராய்ச்சி, போட்டி ஆகியவை நடைபெறும் ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாக இது செயல்படும். இதன் மூலம் தமிழக வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்கவும், பதக்கங்கள் வெல்லவும் உதவியாக இருக்கும்.மாநிலம் முழுவதும் பத்து ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

இவை வெவ்வேறு மாவட்டங்களில் அமைந்து, பழங்குடியினர், கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மையம் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தும். விளையாட்டு விடுதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பல துறைகளில் கவனம் செலுத்தி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்படும்.2036 ஒலிம்பிக்கில் தமிழகத்திலிருந்து குறைந்தது பதினைந்து பதக்கங்களை வெல்வதே அரசின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share