×
 

#BREAKING திருவண்ணாமலையில் எஸ்.ஐ.மீது கார் ஏற்றிக் கொல்ல முயற்சி... போதைப்பொருள் கும்பல் அட்டூழியம்...!

சேத்துப்பட்டு எஸ்ஐ மீது கார் ஏற்றி கொலை முயற்சி. குட்கா கடத்தல் கும்பல் துணிகரம்; 2 பேர் கைது

சித்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வழியாக காரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லதா, போலீஸ்காரர் விக்னேஷ் ஆகியோர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நான்கு முனை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீஸ்காரர் விக்னேஷ் தடுத்து நிறுத்த முயன்றபோது, காரில் இருந்தவர்கள் அவரை தள்ளிவிட்டு தப்பினர். தொடர்ந்து நான்கு முனை சந்திப்பில் காரை சப்-இன்ஸ்பெக்டர் லதா தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் மீது மோதுவது போல் காரை ஓட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. லதா விலகியதால் கார் வந்தவாசி சாலையில் தப்பியது.

இதையடுத்து தவெக உறுப்பினர் யாசர் உசேன் மற்றும் பொதுமக்கள் காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து காரில் இருந்த இருவருக்கு தர்மா அடி கொடுத்தனர். போலீசார் காரில் இருந்த சித்தூரை சேர்ந்த கணேசபெருமாள் (46), சிவபிரசாந்த் (30) ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

காரில் சோதனை செய்ததில் 14 ஹான்ஸ் மூட்டைகள், 3 கூல்லிப் மூட்டைகள், 8 விமல் மூட்டைகள் என மொத்தம் 25 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

இதையும் படிங்க: அமித் ஷா வருகையால் தமிழகம்–புதுச்சேரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு! 3 நகரங்களில் பரபரப்பு! முழு விவரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share