×
 

பரபரப்பை கிளப்பிய டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் - எஸ்.பி. அதிரடி உத்தரவு...!

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் நடவடிக்கை

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி ஆக இருந்த சுந்தரேசன் தனக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டு விட்டதால், அவரது வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று நடந்து சென்ற வீடியோ ஊடகங்களில் பரவியது. 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை, அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கி விட்டதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது மாவட்ட காவல்துறை அழுத்தம் தருவதாக தனது குமுறலை வெளிப்படுத்திருந்தார். 

இதையும் படிங்க: பழனி ஆண்டவனுக்கு அரோகரா..!! 3ம் படை வீட்டில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!

நிலையில் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று காலை முதல் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையின் முடிவில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய அவர் திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தநிலையில், அவரை இன்று (ஜூலை 18) சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: கிட்னி திருட்டு.. கூண்டோடு சிக்கும் புரோக்கர்கள்! ஹாஸ்பிடல்களுக்கு பறந்த நோட்டீஸ்.. அடுத்தடுத்த உத்தரவுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share