×
 
☰

#BREAKING விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் பல்வேறு மாவட்டகளில் மழை பெய்து வருகின்றது இந்த சூழலில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு முதல் லேசான மழை பெய்து வருகின்றது.

வேண்பாக்கம், வல்லம், திம்மாவரம், ஆத்தூர், பாலூர், பரனூ, புலிப்பாக்கம், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பக்கம், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் நேற்றிரவு முதல் விடிய விடிய லேசான மழை பெய்து வருகின்து.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரப்பன் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 14 மாவட்டங்களுக்கு குறி... இன்று தரமான சம்பவம் செய்யப் போகும் மழை...!

சென்னையைப் பொறுத்தவரை  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில்  தான் 12 சென்டி  மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 10.7 சென்டி  மீட்டரும், பாம்பனில் 5.5 சென்டி  மீட்டரும், கோவையில் 3.9 சென்டி  மீட்டரும், கன்னியாகுமரியில் 3.2 சென்டி  மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று (21.10.2026) ஒரு நாள் மட்டும்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை  அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதாவும், கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியரும் அறிவித்துள்ளனர். 

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று (21.10.2026) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.தி.சினேகா.இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை கனமழைக்கு மேகவெடிப்பு காரணமல்ல: வானிலை ஆய்வு மையம் திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share