×
 

தப்பித்தவறி இன்னைக்கு ஊட்டி பக்கம் போய்டாதீங்க... வெளியானது முக்கிய எச்சரிக்கை...! 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக உதகையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்றும் மூடப்பட்டுள்ளன.

நீலகிரிக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சாலட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் மரங்கள் அதிகமாக உள்ளதால் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் விழும் அபாயம் உள்ளது.

 இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம் , உதகை கூடலூர் சாலையில் உள்ள பைன் மரக்காடுகள் , 8th மைல் ட்ரீ பார்க், போன்ற சுற்றுலா தளங்கள் இன்று மூடப்படுவதாக  வனத்துறை தெரிவித்துள்ளது. தொட்டபெட்டா காட்சிகளை நேற்றும் இதேபோன்று மூடப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜஸ்ட்டு மிஸ்ஸு.. எதிரே வந்த போர் விமானம்.. டைவ் அடித்த ப்ளைட்.. தூக்கிவீசப்பட்ட பயணிகள்..

இதற்கிடையே மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 12 சென்டிமீட்டர் மழையும் அடுத்ததாக நடுவட்டம் பகுதியில் 7. 3 சென்டிமீட்டரும், போர்த்தி மந்து அப்பர் பவானியில் 6 சென்டிமீட்டர்,கூடலூர் , மேல் கூடலூர் ஓவேலி பகுதிகளில் 5 சென்டிமீட்டர்,பார்சன்ஸ் வேலி தேவாலா 4 செமீ, பந்தலூர், சேரங்கோடு பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
 

இதையும் படிங்க: சோழ தேசத்தை நோக்கி பிரதமர் மோடி... கங்கை கொண்ட சோழபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share