×
 

அவர் எங்கள புகழ்ந்தா பேசுவாரு? சும்மா குறை சொல்லிட்டே இருப்பாரு.. இபிஎஸ்-ஐ வெளுத்த துரைமுருகன்..!

இருட்டிலும் இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது அதிமுக தான் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை, தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2.17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது, அது கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

ஆனால், கால்வாய்களின் பராமரிப்பு இல்லாததால், தண்ணீர் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாசனத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது, கால்வாய்களின் பராமரிப்பு குறித்து எழுப்பப்பட்டது. 

இதையும் படிங்க: எவராலும் 100க்கு 100 % வாக்குறுதி நிறைவேற்றவே முடியாது... திமுகவுக்கு வரிந்து கட்டி வந்த திருமா...

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனிடம் முல்லைப் பெரியாறு அணை திறந்து வைத்தாலும் கால்வாய்களை தூர்வார வில்லை என்ற அதிமுகவின் குற்றச்சாட்டை முன்வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு இருப்பதாகவும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எங்களை பாராட்டவா செய்வார்., குறை கூறிக் கொண்டே தான் இருப்பார் என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருட்டில் இருந்து மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தை சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், இருட்டிலும் சரி இக்கட்டிலும் சரி மாட்டிக் கொண்டு இருப்பது அதிமுக தான் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜெயில்ல போட்டாலும் பிரச்சனை இல்ல.. தடையை மீறி போராடுவேன்.. சீமான் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share