அப்பனே முருகா... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்...!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர கடவுள் பக்தி உள்ளவர். இவரது குடும்பத்தில் இவரை தவிர அனைவருமே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். இருப்பினும், துர்கா ஸ்டாலினுக்காகவே வீட்டில் பூஜை அறை அமைக்கப்பட்டு தினமும் வழிபட்டு வருவதாக பல்வேறு நேர்காணலில் துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுச் சென்று வழிபாடு நடத்துவது, யாகம் வளர்ப்பது, நேர்த்திக்கடன் செலுத்துவது, கும்பாபிஷேகம் மற்றும் கோயில் விழாக்களில் பங்கேற்பது போன்ற நிகழ்வுகளில் துர்கா ஸ்டாலின் தவறாமல் பங்கேற்று வருகிறார். திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து துர்கா ஸ்டாலின் அடிக்கடி கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.
தமிழக முதல்வரின் மனைவியான துர்கா ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தடைந்தார்.
இதையும் படிங்க: என் வீட்டுக்காரர் தான் எல்லாமே! நானும் உங்களோட ஒருத்திங்க... நெகிழ்ந்து பேசிய துர்கா ஸ்டாலின்..!
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பாக செயல் அலுவலர் சூரிய நாராயணன்.வாழ்க வளர்க குழு தலைவர் சத்யபிரியா மற்றும் கோவில் ஸ்தானிக பட்டர்கள் திருக்கோவிலுக்கு கருவறைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
சுமார் 25 நிமிடம் சாமிதரிசனம் செய்து துர்கா ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார்.அவரை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா செயல் அலுவலர் சூரியநாராயணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
வின்பாஸ்ட் கார் விற்பனையை தொடங்கி வைப்பதற்காகவும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!