#BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?
தமிழகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் மற்றும் உதிரி பாகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள வழக்கு தொடர்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் பெருங்குடியில் 4 இடங்களிலும், அண்ணாநகரில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை 27 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 41 இடங்களில் ரெய்டு..! சாட்டையை சுழற்றும் விஜய் அரசு..! பரபரக்கும் தமிழகம்..!!
சென்னை அண்ணாநகர், பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை எதற்காக நடைபெறுகிறது என்று பார்க்கும்போது, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உபகரணங்களை சப்ளை செய்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் மின்வாரியம் தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாக ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அதாவது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ சார்பில் 45,000-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில், சுமார் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின்வாரியத்திற்குத் தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை நிறைவடைந்த பின்னரே, ஏதேனும் முக்கிய ஆவணங்கள் அல்லது பணம், ரொக்கம் உள்ளிட்டவை சிக்கியுள்ளதா என்பது தெரியவரும். மேலும், இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பதும் சோதனை முடிவில்தான் தெரியவரும்.
தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்த அடி... கரூரை சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை... திமுக ஒன்றிய செயலாளர் வீட்டிலும் ரெய்டு...!