E-FILING முறை வேண்டாம்... சென்னையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...!
E filing முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய நீதிமன்றங்களில் E-Filing (மின்னணு வழக்கு தாக்கல்) முறையை வழக்கறிஞர்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களுடன் தொடர்புடையவை. இந்தியாவின் e-Courts திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, வழக்குகளை ஆன்லைனில் தாக்கல் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே, குறிப்பாக 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களையும் நீதிமன்ற புறக்கணிப்புகளையும் நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் அதிகமானோர் தாக்கல் செய்ய முயன்றால் சர்வர் செயலிழந்து விடுகிறது. இதனால் ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்கே பல மணி நேரங்கள் அல்லது நாட்கள் ஆகிவிடுகின்றன. இது வழக்கறிஞர்களின் நேரத்தை வீணடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது.மேலும், இணைய இணைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளின் பற்றாக்குறை பெரிய சவாலாக உள்ளது.
அடுத்து, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவின் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. புதிய முறையை அமல்படுத்துவதற்கு முன் வழக்கறிஞர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. E-Filing போர்ட்டல் அடிக்கடி செயலிழப்பு, மெதுவாக இயங்குதல், தெளிவில்லாத வழிமுறைகள் போன்ற சிக்கல்களை கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக, ஒத்துஊதும் அதிமுக..! திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!
எனவே இ ஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். E-பைலிங் முறையால் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவதாக கூறி கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் கூடினர்.
இதையும் படிங்க: அடக்குமுறையை கட்டவிழ்க்கும் திமுக... குப்பை கிடங்கை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு சீமான் ஆதரவு குரல்...!