×
 

பீகார்: வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!

பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி  நடைபெற்று வரும் நிலையில், அவரது பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதனால் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் நோக்கில் இந்த சிறப்பு திருத்தம், 2023-ல் தொடங்கப்பட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 1 அன்று வெளியான முன்னைய பட்டியலில் 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதன் பிறகு, செப்டம்பர் 1 வரை உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதன் விளைவாக, 16.59 லட்சம் புதிய வாக்காளர்கள் (பார்ம்-6 மூலம்) சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரம், தகுதியற்ற 47 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது, தேர்தல் ஆணையத்தின் தூய்மைப்படுத்தும் முயற்சியின் விளைவு என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி ஜாலி தான்.. VIP-களுக்கு மாதம் ரூ.1000.. பீகார் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு..!!

இந்த அறிவிப்பு, எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்டவை, உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்திற்கு அணுகியிருந்தன. ஆதார் அட்டையை அடையாள அட்டையாக ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அது அனுமதிக்கப்பட்டது. தேஜஸ்வி தனது பெயர் நீக்கப்பட்டதாக கூறியது, போலி EPIC எண்ணை அடிப்படையாகக் கொண்டது என தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று பீகார மாநிலத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர். முன்னதாக 32,03,370 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 32,91,478 அதரித்துள்ளனர். பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம். தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5ஆம் தேதி பீகார் சென்று தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆராய உள்ளது. அதன்பின் பீகார் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தத் திருத்தம், பீகாரின் அரசியல் அரங்கை சூடாக்கியுள்ளது. ஆளும் ஜேடியூ-பிஜேபி கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதரவாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முயல்கின்றன. வாக்காளர்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தி, தேர்தலில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share