தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான கட்டமாக, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர், இன்று மாலை 4:00 மணியளவில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் கடந்த முறையைப் போலவே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதுகாப்புச் சவால்கள் நிறைந்த மேற்குவங்கத்தில் பல கட்டங்களாகவும், அசாமில் 2 அல்லது 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படலாம்.
இதையும் படிங்க: சென்னை 16 தொகுதிகளுக்கும் நோடல் அலுவலர்கள் நியமனம்.... மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் உத்தரவு!
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களிலும் மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வரும். இதன் மூலம் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, முக்கிய இடமாற்றங்களைச் செய்யவோ முடியாது.
சமீபத்தில் முடிக்கப்பட்ட சிறப்புத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு, தமிழகத்தில் சுமார் 6.2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக உள்ளனர்.
தேர்தல் பணிகளுக்காகச் சுமார் 1.5 லட்சம் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் (CAPF) ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக மேற்குவங்கத்திற்கு கூடுதல் படைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 10-உடன் முடிவடைய உள்ளதால், ஏப்ரல் மாதம் இறுதிக்குள் அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் முடிக்கப்படத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!