×
 

சென்னை 16 தொகுதிகளுக்கும் நோடல் அலுவலர்கள் நியமனம்.... மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் உத்தரவு!

தேர்தல் தொடர்பான 8 குறிப்பிட்ட பணிகளைக் கண்காணிக்க 8 உயர் அலுவலர்களை நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தவும், முறையாகக் கண்காணிக்கவும் நோடல் அலுவலர்களை (Nodal Officers) நியமித்துச் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்க இந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துதல், மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் போன்ற பணிகளைக் கண்காணிக்க 8 உயர் அதிகாரிகள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொகுதிகள் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் விபரம் 
1. இணை ஆணையர் (கல்வி)எழும்பூர் (16), ராயபுரம் (17)
2. துணை ஆணையர் (R&F)விருகம்பாக்கம் (22), தியாகராய நகர் (24)
3. சென்னை மாவட்ட ஆட்சியர்துறைமுகம் (18), மயிலாப்பூர் (25)
4. இணை ஆணையர் (சுகாதாரம்)வில்லிவாக்கம் (14), அண்ணா நகர் (21)
5. துணை ஆணையர் (பணிகள்)திரு.வி.க நகர் (15), கொளத்தூர் (13)
6. மண்டல துணை ஆணையர் (வடக்கு)டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11), பெரம்பூர் (12)
7. மண்டல துணை ஆணையர் (தெற்கு)சைதாப்பேட்டை (23), வேளச்சேரி (26)
8. மண்டல துணை ஆணையர் (மத்தியம்)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (19), ஆயிரம் விளக்கு (20)

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!

பெயர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகளை மேற்பார்வையிடல். விதிகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்தல் மற்றும் பறக்கும் படைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல். வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் ஆகியவற்றை உறுதி செய்தல். தேர்தல் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல்.

ரிப்பன் மாளிகை வளாகத்தில் கூடுதல் மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்த நோடல் அலுவலர்கள் தங்களதுப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நிர்வாக ரீதியான இந்தக் கட்டமைப்பு மாற்றங்கள் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

இதையும் படிங்க: “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share