விவசாயிகளே தயாரா? ... கோவை விசிட்... தமிழில் பிரதமர் மோடி கொடுத்த அசத்தல் அப்டேட்...!
கோவை வருகை தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கோவை கொடிசியாவில் இன்று (நவம்பர் 19, புதன்கிழமை) இயற்கை விவசாயிகள் மாநாடு தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு அவர் விருது வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
தொடர்ந்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை விடுவிக்கிறார். பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடையவுள்ளனர்.
இன்றுபிற்பகல் 1 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, பிற்பகல் 1.30 மணிக்கு சாலை மார்க்கமாக கொடிசியா வளாகத்திற்கு செல்கிறார். பிற்பகல் 1.45 மணி முதல் 3.20 மணி வரை இயற்கை வேளாண் கூட்டமைப்பின் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கும் அவர், பிற்பகல் 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்து, தனி விமானம் மூலம் புறப்பாடு செல்கிறார்.
இதையும் படிங்க: கையில் கோரிக்கை மனுவுடன்... இன்று பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!
பிரதமர் மோடி வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, நேரு நகர், கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு, ரெட் ஜோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை வருகை தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோவை செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகள் நலன் காக்க... நெல் ஈரப்பதத்தை உயர்த்துங்கள்... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!