திமுக முக்கிய புள்ளிக்கு சுத்துப்போட்ட அமலாக்கத்துறை... 12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனை... சிக்கியது முக்கிய ஆவணங்கள்?
லால்குடியில் திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேர அமலாக்கத்துறை சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பகுதியில், திமுக பிரமுகர் கிறிஸ்துராஜா இல்லத்தில் இன்று நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவடைந்தது. இச்சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பணி நியமனத்திற்காக ₹50 கோடிக்கும் மேல் பணம் கைமாறியுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்... லால்குடியில் அதிரடியாக களமிறங்கிய அமலாக்கத்துறை...!
தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த வழக்கை அமலாக்கத்துறையும் கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த ஆங்கரை பகுதியில் உள்ள தூய சகாய மாதா ஆலயம் அருகே வசித்து வரும் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் கிறிஸ்துராஜா என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனையில் இறங்கினர்.
துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் மத்திய போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை 6:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த விசாரணையையும், சோதனையையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை தொடங்கிய இந்தச் சோதனையானது, 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தது. இந்த அதிரடி சோதனையின் போது, கிறிஸ்துராஜாவின் வங்கிப் பரிவர்த்தனைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீண்ட நேர விசாரணை மற்றும் சோதனைக்குப் பிறகு, தங்களுக்குத் தேவையான ஒருசில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!