அது டீசல் ரசாயனம்.. பார்த்து கையாளுங்க! இபிஎஸ் எச்சரிக்கை..!
திருவள்ளூரில் ரயில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீட்புப் பணிகளை மிகுந்த எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் எதிர்ப்பாராத விதமாக தடம் புரண்டது. 52 டேங்கர்களின் எரிபொருட்கள் ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் என்ஜினில் தீ பற்றியதில் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதன் பேரில், 60 பேர் கொண்ட இரண்டு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸா பெருமாள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தெற்கு ரயில்வே விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த தீ விபத்து காரணமாக வந்தே பாரத் உள்ளிட்ட 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் மிகவும் எச்சரிக்கையோடு கையாண்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய மாநில பேரிடர் மீட்பு படைகளை உடனடியாக ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக பாதுகாப்போடு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கான தற்காலிக தங்கும் இடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்தை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். இது சாதாரண தீ விபத்து கிடையாது என்றும் டீசல் ரசாயனம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு கையாண்டு மக்களை காக்கும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 2 நிமிஷம் கூட நிக்கல... இதுவே ஜெ.வா இருந்திருந்தா? நொந்துபோன அதிமுகவினர்..!
இதையும் படிங்க: எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!