இபிஎஸ் தொகுதியில் இருந்து வெளியான அதிர்ச்சி வீடியோ... பாமக பிரமுகர் வெடித்தது சர்ச்சை... சீனுக்கு வரும் தேர்தல் ஆணையம்...!
டப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிப்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிப்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற நிலையில், எடப்பாடியில் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது. எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் பாலா என்ற நபர், தான் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதேபோல், மற்றொரு நபரும் வாக்களிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததால், இது பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடி மையங்களில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவது மற்றும் வாக்களிக்கும் செயல்முறையை படம் பிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “100% Confident ஆக இருக்கேன்...” - குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றிய இபிஎஸ்... சிரித்த முகத்துடன் சொன்ன முக்கிய செய்தி...!
இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் தொகுதியில் வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகள் மீறலாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
எடப்பாடியில் ஏற்பட்ட இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!