×
 

“100% Confident ஆக இருக்கேன்...” - குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றிய இபிஎஸ்... சிரித்த முகத்துடன் சொன்ன முக்கிய செய்தி...!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊரில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு , ஓமலூர் , எடப்பாடி , சங்ககிரி , மேட்டூர் ,  வீரபாண்டி ,  சேலம் தெற்கு , சேலம் மேற்கு ,  சேலம் வடக்கு ஆகிய  11 சட்டமன்ற தொகுதிகளில் 27 லட்சத்து 80 ஆயிரத்து 356 வாக்காளர்கள் உள்ளனர் இவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக  3,468  வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே அந்தந்த தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்த தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தற்போது வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க நிழல் கூடம் அமைக்கும் பணி என  பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும்  மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் மூன்று சக்கர சைக்கிள் வசதி, சாய்வு தள வசதி போன்றவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இது தவிர ஆறு வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள மையங்களில் வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வகையில் , பல்வேறு வண்ண பெயிண்டுகளால் கோடுகள் போடப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு சட்டப்பேரவை  தொகுதியிலும்  ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தப்பான ஆளுக்கு ஓட்டு போட்டுடாதீங்க..! இளம் வாக்காளர்களுக்கு EPS வேண்டுகோள்..!!

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அவருடைய சொந்த ஊரில் தனது வாக்கினை செலுத்தினார். எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் தனது மனைவி ராதா , மகன் மிதுன் , மருமகள் திவ்யா , பேரன் என குடும்பத்தினருடன் வந்த எடப்பாடி பழனிசாமி மற்ற வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , அனைவரும் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். அதேபோல் அனைவரும் தவறாமல் வாக்கினை செலுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதேபோல், காரைக்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர் நிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் நிலையானயான ஆட்சி, மக்கள் நலத்திட்டங்கள், நிலையான வளர்ச்சி ஏற்படுத்தி தந்த திராவிட முன்னேற்ற கழக அரசு , மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் அமையும் என்றார். 
 

இதையும் படிங்க: தமிழ்நாட்டைக் காப்பாற்றும் இறுதி யுத்தம் இது..! வன்முறை காடாக மாறிய மாநிலம்..! EPS குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share