×
 

போதாத ஆட்சி.. எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க.. விவசாயிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய இபிஎஸ்..!

வேளாண் மக்களின் உறுதுணையோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.

இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகளோடு கலந்துரையாடினார். அவர்களோடு கலந்துரையாடி, குறைகளை எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தேக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

இந்த கலந்துரையாடலில், விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகளான பயிர் விலை, நீர்ப்பாசன வசதிகள், மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளூர் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், பருத்தி உற்பத்தியாளர்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உரிய விலை கிடைக்காதது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டனர். விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஏற்கனவே தங்களது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சில செயல்பாடுகளை இந்த ஆட்சியாளர்கள் மாற்றி அமைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share