×
 

அதிமுக ஆட்சி வந்ததும் சரவெடி தான்! 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. வாக்குறுதியை அள்ளி வீசிய இபிஎஸ்..!

அதிமுக ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். 

கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். 

அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்து வருகிறார். 

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணியா? - மெளனம் கலைத்த ஓபிஎஸ்... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...!

இந்த நிலையில், நெல்லையில் விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். 

அப்போது, கொரோனா காலத்தில் கட்டடத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கியதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் வறட்சி நிவாரண நிதி பெற்றுக் கொடுத்ததாகவும் கூறினார்.

 கடன் வாங்கும் விவசாயிகளை அலைக்கழிப்பதற்காகவே சிபில் ஸ்கோர் முறை அமல்படுத்தப்பட்டது குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, பிரதமரிடம் முறையிட்ட பிறகு சிபில் ஸ்கோர் முறை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

 தற்போது ஷிப்ட் முறைப்படி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடை இன்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் இபிஎஸ் உறுதியளித்தார்.

அதிமுக ஆட்சியில் 2,048 கோடி வளர்ச்சி நிவாரணம் கொடுக்கப்பட்டது என்றும் சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதிக மானியம் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்த உடன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட தொகை விவசாயிகளின் வகை கணக்குகளில் வர வைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா… இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே! திமுகவுக்கு தாவும் ஜெயக்குமார்? அரசியலில் பரபரப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share