×
 

CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது பிரச்சனை, விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பேசினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் வாக்குறுதி படி விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். தமிழக முழுவதும் பயிர் கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள் போராடும் நிலைக்கு தமிழக வெற்றி கழக அரசு தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டினார். வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான முழு பயிர் கடன் தள்ளுபடி தமிழக வெற்றிக்கழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும் விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார். விவசாயிகள் போராடும் நிலைக்கு தமிழக வெற்றி பெற அரசு தள்ளி இருப்பதாக கூறி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். முதலமைச்சரின் விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மேகதாது பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் குரலை முதலமைச்சர் விஜய் பொருட்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களும் பேசி வருகிறார்கள் என்றும் ஆனால் முதல்வருக்கு அக்கறை இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூறியும் முதலமைச்சர். விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: "NO FLY ZONE" விதிகளை மீறிய CM விஜய்..? சட்ட நடவடிக்கை எடுக்கணும்... அதிமுக வலியுறுத்தல்..!!

முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். காவிரியில் தினமும் 3500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக முதல்வர் மதிக்கவில்லை என்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் பிடிவாதம் பிடிக்கிறார் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கியத்துவம்..! துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கிய EPS..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share