ADMK பொதுச் செயலாளர் விவகாரம்... இபிஎஸ் மனு தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்க கூடிய ஈபிஎஸ் மனோ தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உரிமையியல் நீதிமன்றம், எடப்பாடி க. பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில், சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை எனவும், அவருக்கு கட்சி நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிகளை மீறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சூரியமூர்த்தி தரப்பு வாதத்தை ஏற்கவில்லை, ஆனால் எடப்பாடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணைக்கு தகுதியானது என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: “ஏய்.. வண்டிய நிறுத்துயா...!” - திடீரென கூட்டத்திற்குள் நுழைந்த ஆம்புலன்ஸால் டென்ஷன்.. எச்சரித்த இபிஎஸ்..!
இந்த நிலையில், உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கூறிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சூரியமூர்த்தி பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவிற்கு இபிஎஸ் திடீர் அழைப்பு... அரசியலில் தலைகீழ் திருப்பம்.!