×
 

#BREAKING: திமுகவிற்கு இபிஎஸ் திடீர் அழைப்பு... அரசியலில் தலைகீழ் திருப்பம்.!

துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியது. 16 வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் ஜன சங்கத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவசரநிலைக் காலத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

திருவண்ணாமலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரினார்.

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான இபிஎஸ்.. கொஞ்சம் விட்டிருந்தா என்ன ஆகிற்கும்..!!

திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்பிக்களும் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.  தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பு என்பதால் கட்சி பேதமின்றி அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது அதிமுக ஆட்சிதான்! இபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share