கையில் கோரிக்கை மனுவுடன்... இன்று பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!
நரேந்திர மோடி - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பானது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கோவை வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க உள்ளார்.
கோவை கொடிசியாவில் நடக்கும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் கூட்டமைப்பினர் மாநாடு நடத்துகின்றனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்று துவங்கி வைக்கிறார். இந்த நிலையில் கோவை விமான நிலையத்திற்கு ஒரு மணிக்கு மேல் வரும் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முன்னாள் முதலமைச்சரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவைக்கு வருகை தர இருக்கின்றார்.
கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பாஜக தலைவர்கள் சந்தித்து வரவேற்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிச்சாமி சென்று சந்திக்க இருக்கின்றார்.
இதையும் படிங்க: விவசாயிகள் நலன் காக்க... நெல் ஈரப்பதத்தை உயர்த்துங்கள்... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!
பிளவுபட்ட அதிமுக, அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்திருக்கின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக நிலை தடுமாறி நிற்கும் நிலையில், பிளவுபட்ட அதிமுகவை பாஜக ஒன்றிணைக்கவே முற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டையன் பாஜகவின் டெல்லி தலைவர்களை சந்தித்த நிலையில், பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த வேண்டும், தமிழக மீனவர்களை இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க உள்ளாராம்.
இந்த சந்திப்பின் போது அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், வி.கே. சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்பது தொடர்பாகவும், குறிப்பாக டிடிவி தினகரன் தொடர்ந்து தன்னை அவமதிக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருவதையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வேளாண்மை சார்ந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகை தந்தாலும், நரேந்திர மோடி - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பானது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி..!! உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்..!! ட்ரோன்கள் பறக்க தடை..!!