ஆத்திரத்தில் இபிஎஸ் மூளை கலங்கி போயிருக்காரு! முத்தரசன் கடும் தாக்கு..!
எடப்பாடி பழனிசாமி இதோடு வாயை மூடிக்கொள்ள வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்காக அழைப்பு விடுத்திருந்தார்.
அதிமுக கூட்டணிக்கு வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் என்று கூறியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணிக்கான அழைப்பை கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிராகரித்து விட்டன.
பாஜக கூட கூட்டணியில் உள்ள அதிமுகவுடன் இணைய எப்படி கம்யூனிஸ்டுகளை அழைக்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து இருந்த இபிஎஸ் தற்போது தனது சுற்றுப் பயணத்தின் போது கம்யூனிஸ்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். கூட்டணிக்காக விடுத்த அழைப்பை நிராகரித்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளை இபிஎஸ் கோபத்தில் விமர்சிக்கிறார் என்ற விமர்சனமும் அவ்வப்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கம்யூனிஸ்டுகளை குறிவைக்கும் இபிஎஸ்..! கொந்தளித்த முத்தரசன்..!
இன்றைய கம்யூனிஸ்ட் காரர்கள் கூட்டணிக்காக கூவிக் கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் இபிஎஸ் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முத்தரசன் சாடி உள்ளார். அமைதி இழந்து, ஆத்திரத்தில் மூளை கலங்கி போய் உள்ளார் ஈபிஎஸ் என்றும் துரோகத்தின் வாழும் அடையாளமாக நடமாடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் விமர்சித்தார்.
ஜெயலலிதாவின் உணர்வுக்கும் உறுதிமொழிக்கும் துரோகம் அழைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் மெகா கூட்டணி அமைக்கப் போவதாக இபிஎஸ் ஆரவாரமாக முழங்கியதாகவும் கம்யூனிஸ்டுகள் பற்றி பேசுவதற்கு எந்த வித தகுதியும் இல்லாதவரை எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார்.
மெகா கூட்டணி அமையாது விரக்தியில் இபிஎஸ் விழுந்துள்ளார் என்றும் கூவத்தூரில் தன்னை முதலமைச்சர் ஆக்கியவருக்கு துரோகம் செய்தவர் ஈபிஎஸ் என்றும் கூறினார். அமித்ஷா கூட்டணியை அறிவித்தபோது கைகட்டி, வாய் பொத்தி நின்றது கேவலமான காட்சி என்றும் முத்தரசன் விமர்சித்தார்.
இதையும் படிங்க: தொடரும் ஆணவப் படுகொலைகள்.. தனிச்சட்டம் இயற்றுங்கள்! திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்..!