×
 

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி... எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி... உண்மையை மறைக்க பாக்குறாங்க! இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!

அரசின் அலட்சியத்தால் தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்புச் செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளை கேட்ட பின்னர் தான் முதலமைச்சரை சபாநாயகர் பேச அனுமதி அளித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும்

முதலமைச்சர் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்ததாகவும், பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது என்றும் அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என்று தெரிவித்தார்.

போதிய பாதுகாப்பு கொடுக்காதது மற்றும் அலட்சியத்தின் காரணமாக 41 உயிர்கள் பறிபோனதாக கூறினார். எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று உளவுத்துறைக்கும், அரசுக்கும் தெரிந்திருக்கும் என்றும் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி ஆளும் கட்சிக்கு ஒரு நீதி என இருப்பதாக கூறினார். நான்கு மாவட்டங்களில் விஜய் ஏற்கனவே பிரச்சாரம் நடத்தி இருப்பதாகவும் கூட்டத்திற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட இடத்தையும் அரசு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் பேச முடியாததை செய்தியாளர் சந்திப்பில் பேசுவதாக கூறினார்.

இதையும் படிங்க: சிபிஐ க்கு மாறிய கரூர் வழக்கு... மீண்டும் நீதிமன்ற காவல்? தவெக நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர்...!

600 போலீசார் என முதலமைச்சர் கூறுவதாகவும் 500 போலீசார் என ஏடிஜிபி கூறுவதாகவும், ஆனால் விஜய் பிரச்சாரத்தை தான் டிவியில் பார்த்த போது 500 போலீசார் எங்குமே தென்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: 8 மணி நேரத்தில் உடற்கூறு ஆய்வா? EPS- க்கு பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share