''வேற மாதிரி ஆகிவிடும்'' மிரட்டிய எஸ்பி.. கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி..!
விருதுநகர் அருகே போராடிய மக்களை காவல்துறை அதிகாரி மிரட்டியதை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துள்ளார்.
சிவகாசி அருகே சின்னக்காமன் பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் 8 பேர் பலியாயினர். 8 பேரில் 7 உடல்களின் உடற்கூறு ஆய்வு நேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடிவுற்றது. ராமமூர்த்தி என்பவரின் உடல் சிவகாசி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவுற்றது இதில், விருதுநகர் அருகே சூலக்கரை சேர்ந்த வைரமணி, மீனம் பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆகிய இருவரின் உடலை மட்டும் உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.
ஆனால் உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, மீதமுள்ள ராமஜெயம், நாக பாண்டி, லட்சுமி, செல்லப்பாண்டி, புண்ணியமூர்த்தி ஆகிய 5 பேரின் உடல்களை பெற்றுச் செல்ல மறுத்து உறவினர்கள் விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகே மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை ஒழுங்கா இருக்கணும், கோஷம் போட்டா வேற மாதிரி ஆயிடும் என்று விருதுநகர் எஸ்பி கண்ணன் மிரட்டல் தொனியில் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: #SORRY.. ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி..!
இதுகுறித்து தனது கண்டனத்தை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் மு.க.ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்! மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி