×
 

நீங்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி? நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? ஈபிஎஸ் விளாசல்!!

அதிமுக, பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் ஏப்ரல் மாதமே கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் அணி, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி ஆகியவை உள்ளன. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளையும் கூட்டணிகளை சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணியில் இணைய வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் அக்கட்சி அறிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தற்போதே பரப்புரையைத் தொடங்கிவிட்டார். கோவை மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஆம்னி பேருந்தில் அமர்ந்தபடி பொதுமக்களை சந்தித்து வருகிறார்.  இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே இந்த கூட்டத்தை பார்த்து உங்களுக்கு ஜுரம் வரப்போகிறது. நாளையே மருத்துவமனை செல்லக்கூடிய சூழல் ஏற்படலாம். 2026 தேர்தலில் தீயசக்தியான திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

இதையும் படிங்க: அஜித் உடம்பில் 18 காயங்கள்.. சிபிஐ விசாரணைக்கு மாற்றுங்கள்... எடப்பாடி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டு வருவோம், அதிமுக, பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் இருந்து திட்டங்களை பெற்று நன்மை செய்வதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும். இந்த தீயசக்தி திமுக ஆட்சியை வீழ்த்தி, நல்லாட்சியை நாம் கொண்டுவருவோம்.

நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது. 1999 இல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா? மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது திமுக எதையும் செய்யவில்லை. நீங்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி? நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? ஆனால்  நீங்கள் எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கின்றீர்கள். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இனியும் மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்றுவருகிறது. கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும், யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது தமிழக மக்கள் யாருன்னு தெரியும்... எடப்பாடி பழனிசாமி சாடல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share