மது போதையில் எடப்பாடி பழனிசாமி கண்முன்பே இளைஞர்கள் செய்த காரியம்... தட்டித்தூக்கிய போலீஸ்!
இளைஞர்கள் யாரும் மது போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசும்போதே போதையில் ரகலையில் ஈடுபட இளைஞர்கள் காவல்துறையினர் கண்டித்தனர்
இளைஞர்கள் யாரும் மது போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசும்போதே போதையில் ரகலையில் ஈடுபட இளைஞர்கள் காவல்துறையினர் கண்டித்தனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார்.
அப்போது தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குறைகள் குறித்து உரையாற்றினார். இந்த நிலையில் அவர் தமிழகத்தில் கஞ்சா மற்றும் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றன என பேசும் பொழுது கூட்டத்தில் மது போதையில் இருந்த பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தி அங்கேயிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: “வேணாம்... காரில் ஏற வேண்டாம்...” - செல்லூர் ராஜுக்கு ‘நோ’ சொன்ன எடப்பாடி பழனிசாமி...!
எடப்பாடி பழனிச்சாமி மது ஒழிப்பு குறித்து பேசும் பொழுதே அவரது கூட்டத்தில் மது போதையில் இருந்த இளைஞர்கள் அட்ராசிட்டி பண்ணவே அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் இளைஞர்களை அடித்து சத்தம் போடவே இளைஞர்கள் அமைதி அடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆத்திரத்தில் இபிஎஸ் மூளை கலங்கி போயிருக்காரு! முத்தரசன் கடும் தாக்கு..!