10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு... பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆசிரியர்களே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கானஸ்கிரைப் ஆக தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரு உதவியாளர் வழியாக தேர்வு எழுத அனுமதி உண்டு. அந்த வகையான உதவியாளர்கள் ஸ்கிரைப் என அழைக்கப்படுகின்றனர். இதுவரை பள்ளி ஆசிரியர்களே ஸ்கிரைப் ஆக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் கல்லூரி மாணவ, மாணவியர், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதிலாக தன்னார்வலர்களால் தேர்வு எழுத முடியாது என்பது குறித்தும், இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் எடுத்துரைத்த ஆசிரியர் அமைப்புகள், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறவேண்டுமென வலியுறுத்தின.
கற்பித்தலில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களே மாணவரின் வார்த்தையைக் கேட்டு கோர்வையாக எழுத முடியும். மாற்றுத்திறன் மாணவரின் வார்த்தை செயல்பாடு தன்னார்வலர்கள் புரியாது. எனவே கற்பித்தல் பணியில் உள்ள பாட சம்பந்தமான ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக பயன்படுத்த தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் தரப்பிலிருந்தும் வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: உடனே செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துங்க... TVK மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு..!!!
இந்த விவகாரத்தில் தேர்வு துறை தனிக்கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை ஸ்கிரைப் மாணவர்களுக்காக தேர்வு எழுத ஆவண செய்து தர வேண்டும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆசிரியர்களே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கானஸ்கிரைப் ஆக தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மார்ச் / ஏப்ரல் 2026 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப் போலவே அரசாணை (நிலை) எண் 54, பள்ளிக் கல்வி (பொது1) துறை, நாள் 29.02.2016 மற்றும் அரசாணை (நிலை) எண் 62, பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள் 25.03.2022 ஆகியவற்றைப் பின்பற்றியே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட உள்ளனர். எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல ஆசிரியர்களை சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது”
இதையும் படிங்க: கரூர், சேலம் உயிர்பலி இனி நடக்காது! வேலூருக்கு பக்கா ப்ளான்! தவெக விஜய் நிகழ்ச்சியில் முதல்முறை! 23-ல் பாருங்க!