2026- 27 ஆம் கல்வியாண்டிற்காக 4.11 கோடி பாடநூல்கள் தயார்..! முதல் நாளிலேயே புத்தகங்களை வழங்க திட்டம்..!!
2026 - 27 ஆம் கல்வி ஆண்டிற்காக 4.11 கோடி பாடநூல்கள் தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிப் பாடநூல்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான செய்தி சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களின் கல்வித் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்யும் வகையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மொத்தம் 4.11 கோடி பாடநூல்களை அச்சிட்டு வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தப் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் இந்தப் பாடநூல்கள் தயாரிக்கப்படுகின்றன. 2026-27 கல்வியாண்டு தொடங்கும் போது, பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாடநூல்கள் கிடைக்கும் வகையில் விநியோகப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வரை அச்சிடும் பணிகளில் சுமார் 88 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் 4-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கான பாடநூல்களும் அடங்கும்.குறிப்பாக, 4-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்கள் ஏற்கனவே அச்சிடும் பணி தொடங்கிய நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: சபரிமலை: ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்த விவகாரம்..!! விசாரணையில் திடீர் ட்விஸ்ட்..!! நடந்தது என்ன..??
1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அவற்றுக்கான பாடநூல் அச்சிடும் பணி சற்று தாமதமாகி, பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11-ம் வகுப்பு (பிளஸ் ஒன்) மாணவர்களுக்கான பாடநூல்களும் இந்த 4.11 கோடி எண்ணிக்கையில் அடங்கும். சமீப ஆண்டுகளில் 11-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 2025-26 ஆம் ஆண்டிலிருந்தே புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: மோடி, அமித்ஷா பிரசாரம் வீண்?! வெற்றி வாய்ப்பு யாருக்கு! அறிக்கை கேட்கிறது பாஜக தலைமை!