ஆபத்து... ஆபத்து...!! - பசுக்களின் அடிமடியில் கைவைத்த எல் நினோ... பால் முதல் வெண்ணெய் வரை காத்திருக்கும் அதிர்ச்சி...!
எல் நினோ வறட்சி காரணமாக தென் மாவட்டங்களில் பசு மாடுகளிடம் இருந்து கிடைக்கும் பாலின் அளவு குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எல் நினோ வறட்சி காரணமாக தென் மாவட்டங்களில் பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் அளவு குறைந்து பாதிப்பு. மாடுகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
தென் மாவட்டங்களான நெல்லை தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடு மாடு போன்ற கால்நடைகளை அதிகமாக வளர்க்கும் விதமாகவே தங்களின் வாழ்க்கை முறையை நடத்தி வரும் சூழலை பெரும்பாலான விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர்.
விவசாயிகள் மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பாலை கூட்டுறவு சங்கங்களுக்கும் கடைகளுக்கும் விற்பனை செய்வதன் மூலமாக தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் விநியோக கட்டுப்பாடு... நிலைமை மோசமாகும்..! சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை..!
இந்த நிலையில் தற்பொழுது நாட்டில் நிலவுகின்ற எல் நினோ வறட்சி காரணமாக மாடுகளில் இருந்து உற்பத்தி செய்யக்கூடிய பால் அளவு கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக தினமும் 10 லிட்டர் பால் கறக்கும் மாடுகளுக்கு இந்த வறட்சி சூழ்நிலை ஏற்பட்டதிலிருந்து 5 லிட்டர் குறைந்து பால் கறக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பால்விலை மட்டும் ஏறாமல் அதே நிலையில் இருக்கும் பட்சத்தில் மாட்டை பராமரிப்பதற்கான தவுடு புண்ணாக்கு போன்ற மாடுகளின் உணவு பொருள்களின் விலை மட்டும் அதிக அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பால் மூலமாக தயாரிக்கப்படும் வெண்ணெய்,நெய், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையும் உயரும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் இந்த எல் நினோ வறட்சி காரணமாக விவசாயிகள் பராமரித்து வரும் பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் அளவு கணிசமாக குறைந்துள்ளது.
மேலும் அவைகளை பராமரிப்பதற்கே அதிக தொகை செலவிடப்படுவதாகவும் ஆனால் பால் விலை மட்டும் உயராததால் மாடு வளர்ப்பதையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யாரை ஏமாத்துறீங்க..? GREEN MAGIC பால் தட்டுப்பாடு..! அண்ணாமலை தாக்கு.!