×
 

ஆவின் விநியோக கட்டுப்பாடு... நிலைமை மோசமாகும்..! சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை..!

ஆவின் பால் வினியோக விவகாரத்தில் சிபிஐ வீரபாண்டியன் முக்கிய கோரிக்கை முன் வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆவின் பால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைப்பை உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். பால் கொள்முதலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆவின் நிறுவனம் அனைத்து வகை பால் விநியோகத்திலும் சுமார் 7 சதவீதம் வரை குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், குறிப்பாக மக்கள் அதிகம் விரும்பும் ஆவின் கிரீன் மேஜிக் பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக வீரபாண்டியன் கூறுகையில், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் தினசரி 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்து வருவதாகவும், ஆனால் பொதுமக்களின் உண்மையான தேவை 15.50 லட்சம் லிட்டராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பல தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டாலும், ஆவின் பால், தயிர் உள்ளிட்ட பொருட்களையே மக்கள் நம்பிக்கையுடன் வாங்கி வருவதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ஒரு லிட்டர் ரூ.44 மற்றும் அரை லிட்டர் ரூ.22 என்ற விலையில் கிடைக்கும் கிரீன் மேஜிக் பால் மக்களிடையே மிகவும் பிரபலமானது. 

இதையும் படிங்க: "மீண்டும் ஓர் பிளவு"..! திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய CPI..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இருப்பினும், தற்போது அனைத்து வகை பாலிலும் சுமார் 7 சதவீதம் வெட்டு விழுந்துள்ளதாகவும், கிரீன் மேஜிக் பாலில் மட்டும் 30 சதவீதம் வரை குறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது நுகர்வோரை தனியார் நிறுவனங்களை நோக்கி தள்ளும் செயலாக அமைந்துள்ளது என்று விமர்சித்தார். இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, ஆவினின் சந்தை வாய்ப்பு சுருங்கும் அபாயமும், பால் முகவர்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொள்கை, கத்திரிக்காய் ஒன்னும் இல்ல... தவெக தொப்புள் கொடி அறுக்காத குழந்தை..! சிபிஐ முத்தரசன் விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share